விவசாயம், ஊரக வளர்ச்சி, பாசனத்துக்கு ரூ.2.83 லட்சம் கோடி

விவசாயம், ஊரக வளர்ச்சி, பாசனத்துக்கு ரூ.2.83 லட்சம் கோடி

புதுடெல்லி:

விவசாயம், ஊரக வளர்ச்சி மற்றும் பாசன திட்டத்துக்காக ரூ.2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தோட்டக்கலைத் துறையின் உற்பத்தி உணவு தானியங்கள் உற்பத்தியைவிட அதிகமாக உள்ளது. மழை குறைந்த இடங்களில் ஒருங்கிணைந்த விவசாயத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

விவசாயிகளுக்காக கிஷான் ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயம், ஊரக வளர்ச்சி, பாசனம் தொடர்பான திட்டங்களுக்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக- நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்