சீனாவில் வைரஸ்; ரோஜா ஏற்றுமதி அதிகரிப்பு

சீனாவில் வைரஸ்; ரோஜா ஏற்றுமதி அதிகரிப்பு

ஒசூர்:

ஒசூரிலிருந்து காதலர் தினத்திற்கு இரண்டு கோடி ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்ய மலர் விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், ஒசூரில் சர்வதேச மலர்கள் ஏல மையத்தை அறிவித்த தமிழக அரசிற்கு விவசாயிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதி சீரான சீதோஷன நிலை நிலவுவதால் திற ந்தவெளியிலும், பசுமைக்குடில்களிலும் பல ஆயிரம் ஹெக்டர்களில் ரோஜா விவச £யம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வ £ய்ப்பை பெற்று வருகின்றனர். ஒசூர் ரோஜா மலருக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், ஆண் டுதோறும் கிறிஸ்துமஸ்,புனிதவெள்ளி, காதலர் தினங்களில் அதிகஅளவிலான மலர்கள் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி தேவை இருப்பதால், காதலர் தினத்திற்காக ரோஜா மலர்களை அதிகளவில் ஏற்றுமதி செய்ய விவசாயிகள் ஆண்டுதோறும் திட்டமிடுவது வழக்கம்.

கடந்தாண்டு காதலர் தினத்திற்காக சீனாவிலிருந்து அதிகஅளவில் பிளாஷ்டிக் பூ க்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு சீனாவில் கரோனா வைரஸ் க £ரணமாக சீனா பூக்களின் ஏற்றுமதி குறைந்து இந்திய மலர்களின் ஏற்றுமதி அதிகஅளவில் இருக்கும் என்றும், குறிப்பாக ஒசூர் ரோஜா மலருக்கான தனி இடம் கிடைக்கும் என பேசப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு ஒசூரில் இருந்து காதலர் தினத்திற்காக வெளிநாடுகளுக்கு 2 கோடி மலர்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட் டுள்ளனர்.

தற்போது வரை உள்ளூர் சந்தையில் ஒரு ரோஜா மலர் 10 ரூபாய்க்கும், ஏற்றுமதி 15 ரூபாயுமாக இருந்து வருகிறது, இந்தாண்டு ரோஜா மலரின் உற்ப்பத்தி குறை ந்திருப்பதாலும், காதலர் தினத்திற்காக இன்னும் 15 நாட்கள் உள்ளதாலும் ரோஜா மலரின் விலை அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

தமிழக அரசு அண்மையில் ஒசூரில் 21 கோடி ரூபாயில் சர்வதேச மலர்கள் ஏல மையம் அமைய முதல்வர் அறிவிப்பு செய்துள்ளதற்காக ஒசூர் பகுதி மலர் விவச £யிகள் நன்றியை தெரிவித்துக்கொண்டதுன் விரைவில் பணிகளை தொடங்க வேண் டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்