ஒசூரில் வாகன ஓட்டிகள் அவதி

ஒசூரில் வாகன ஓட்டிகள் அவதி

ஒசூர்:

ஓசூர் மாநகராட்சியில் தோண்டப்பட்ட சாலைகள் 3 மாதங்களாக சரிசெய்யப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி,தமிழகத்தில் அண்மையில் உருவான 14 வது புதிய மாநகராட்சி மாவட்டத்தின் தலைநகரமல்லாத முதல் மாநகராட்சி என்கிற சிறப்புக்குறியது.

ஓசூர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் குண்டும்குழியுமாக இருந்தநிலையில், சாலைகளை விரிவுப்படுத்தவும் சீரமைக்கவும் ஒப்பந்ததாரர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பாக சாலையை தோண்டி உள்ளனர்.

ஓசூர் மாநகர் இராயக்கோட்டை சாலை, இரயில்வே நிலைய சாலை,பாகலூர் சாலை ஆகிய முக்கிய சாலைகளில் ஜல்லி கற்களை கொட்டிவிட்டு பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர்.

காலை, மாலை என மூன்று மாதங்களாக இருசக்கர,கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு உரிய நேரத்திற்கு வேலை உள்ளிட்ட பணிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

பள்ளி,மருத்துவமனை, திருமண மண்டபங்கள், தேவாலயங்கள் உள்ள முக்கிய சாலையிலேயே மூன்று மாதங்களாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் இருப்பதால் அவற்றிலிருந்து வெளியேறும் புகையால் மாணவர்கள்,பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

பொதுமக்களின் நலன் கருதி, சாலை விரிவாக்கப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டுமென ஓசூர் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்