‘ரிசாட்-2பி’ உளவு செயற்கைக்கோள் 22ல் விண்ணில் பாயும்: இஸ்ரோ

‘ரிசாட்-2பி’ உளவு செயற்கைக்கோள் 22ல் விண்ணில் பாயும்: இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா:

இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த, ராணுவ உளவு பணிக்காக ‘ரிசாட்-2பி’ ‘ராடார் இமேஜிங் சாட்டிலைட்’ என்ற செயற்கைக்கோளை மே 22ம் தேதி, இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ விண்ணில் செலுத்துகிறது.

இந்த செயற்கைக்கோள், இந்திய எல்லைப்பகுதிகளை துல்லியமாக கண்காணித்து ராணுவத்துக்கு தகவல் அனுப்பும் வகையிலும், போர் விமானங்கள், கப்பல்கள் நடமாட்டத்தை கண்காணித்து உடனுக்குடன் தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயற்கைக்கோள் பேரிடர் மேலாண்மை மற்றும் வேளாண்மை துறைக்கும் உதவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 22ம் தேதி, காலை 5.47 மணியளவில் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிக்கோட்டா சதீஸ்தவான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்