சாலை தடுப்புகளை அகற்ற கோரிக்கை

சாலை தடுப்புகளை அகற்ற கோரிக்கை

ஒசூர்:

ஓசூரில் தனியார் ஜவளிகடை சுயலாபத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால், அதிக விபத்துக்கள் ஏற்ப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் லால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகள் இயங்கி வருகிறது. இது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளது. இது ஓசூர் நகர பகுதியில் இருந்து வெளிப்புறம் பெங்களூர் சாலையில் இயங்கி வருகிறது.

இந்த கடையின் விளம்பரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையில் இருபுறம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், மேலும் இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள தடுப்பால் விபத்துகள் ஏற்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் பிரிந்து கிராமப்பகுதி, நகர் பகுதி பிரிவு சாலைகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்களின் நலன் கருதி வேகதடை, தடுப்புகள் அமைப்பது வழக்கம். ஆனால் இங்கு எந்த ஒரு பிரிவு சாலையும் இல்லை; மக்கள் கடந்து செல்லவும் பாதைகள் இல்லை. இருப்பினும் தனியார் ஜவளிகடை விளம்பரம், மற்றும் சுயலாபத்திற்காக தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைத்திருப்பது வேதனையளிகிறது.

மேலும், இந்த பகுதியில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய விபத்துக்கள் ஏற்ப்படுவதற்கு முன்பு தடுப்புகளை அகற்றிவிட்டு அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்