14 காங்., எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: சுப்ரீம்கோர்ட்டில் முறையீடு

14 காங்., எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: சுப்ரீம்கோர்ட்டில் முறையீடு

புதுடெல்லி:

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. பின்னர் பெரும்பான்மை நிரூபித்த எடியூரப்பா தலைமையிலான பாஜ அரசு பதவியேற்றது.

காங்கிரசை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களான 14 பேர் மீது சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம் செய்வதாக அக்கட்சி அறிவித்தது.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்த கர்நாடக சபாநாயகர் ராமேஷ்குமாருக்கு எதிராக 14 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்