காதலர்களே உஷார்! ஆசை வார்த்தை கூறி உடலுறவில் ஈடுபட்டால் அது ‘ரேப்’- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

காதலர்களே உஷார்! ஆசை வார்த்தை கூறி உடலுறவில் ஈடுபட்டால் அது ‘ரேப்’- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஒரு பெண்ணுக்கு நம்பிக்கை அளித்து, ஆசை வார்த்தைகள் கூறி  ஒருவருக்கொருவர் உடலுறவில் ஈடுபட்டாலும் கற்பழிப்புக்குச் சமம் என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், ஒரு பெண்ணிடமிருந்து ஒரு ஆணால் பெறப்பட்ட ‘சம்மதம்’, அவர் உண்மையாக நேசிக்கிறார் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று கருதப்படமாட்டாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை நீதிமன்றத்தில் ஒரு கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியை விடுவிக்க வேண்டும் என்று மனுதாரர் விடுத்த கோரிக்கையைத் தள்ளுபடி செய்தபோது, ​​நீதிபதிகள் சுனில் சுக்ரே மற்றும் மாதவ் ஜம்தார் ஆகியோர் இந்த  உத்தரவைப்   பிறப்பித்துள்ளனர்.

இதில், குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்றுப்படி, அவர் அந்த பெண்ணுடன் காதல் உறவைக் கொண்டிருந்ததாகவும், அவருடன் உடலுறவு கொள்ள அந்த பெண் முழு மனதாகச் சம்மதித்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்குப் பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலிருந்து, தனக்குத் தவறான உறுதிமொழியைக் கொடுத்ததால் நம்பிக்கையின் கீழ்,அப்போது சம்மதம் தெரிவித்ததாக அந்தப் பெண் பதிலளித்துள்ளார். மேலும் தன்னை ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி உடலுறவில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கின் சர்ச்சைகள் மற்றும் உண்மைகளைப் பரிசீலித்த பின், “ஆணுக்கு எதிராகப் பெண் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கருதப்பட்டால், அவருடன் பாலியல் உறவு கொள்ள ஒப்புக் கொண்டதது ஒரு பொய்யான அன்பை வெளிப்படுத்தியதால் வந்த விளைவாகவே கருதப்படும்.

ஆரம்பத்தில் அவர் திருமணத்தைப் பற்றிய எந்தவொரு வெளிப்படையான வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்பது உண்மைதான், ஆனால் திருமணத்திற்கு முன்பு, உடல் ரீதியான உறவு எதுவும் இருக்கக் கூடாது என்று அந்த பெண் கூறியதை அவர் ஆரம்பத்தில் எதிர்த்தார் என்பதும் உண்மைதான்.அந்தப் பெண்ணின் மறுப்புக்குப் பிறகுதான், அந்த ஆண், அவளை ஒப்புக் கொள்ளும்படி, பேசி மயக்கியுள்ளார். அத்தகைய வார்த்தைகளை நம்பியதால் அவர் அவனிடம்  சரணடைந்தார் என்று தெரிகிறது, “என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் இருந்ததால் அந்த பெண் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும். “மாறாக, இது ஒரு உறவுக்குள் நுழைவதற்கான சோதனையாகவே அதைக் கருதியுள்ளார் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆனால் வழங்கப்பட்ட உத்தரவாதங்களைப் பெண் உண்மையானது என்று தவறாகக் கருதுவதற்கு போதுமானதாக இருந்தது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்