தமிழகத்தில் நாளை ரம்ஜான்

தமிழகத்தில் நாளை ரம்ஜான்

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு. இம்மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருப்பது வழக்கம். ஷவ்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரமலான் நோன்பு தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவார்கள். இந்நிலையில், ரமலான் நோன்பு தொடங்குவதற்கான பிறை சென்னையில் கடந்த 24ம் தேதி காணப்பட்டது. எனவே மறுநாள் 25ம் தேதி (சனிக்கிழமை) முதல் நோன்பு தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்தார். அதன்படி இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொண்டு வருகின்றனர். ரமலான் மாத இறுதிநாளில் மீண்டும் பிறை தென்பட்ட மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.,இந்நிலையில், தமிழகத்தில் நேற்று பிறை தெரியவில்லை. ஆதலால் இன்று ரமலான் பிறை 30வது நாளாக கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டும். 25ம் தேதி(நாளை) ஈதுல் ஃ பித்ர் பெருநாள் ஆகும் என்று தமிழக தலைமை ஹாஜி முறைப்படி அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்