ஜெட்லிக்கு ஜனாதிபதி, அமித்ஷா அஞ்சலி

ஜெட்லிக்கு ஜனாதிபதி, அமித்ஷா அஞ்சலி

புதுடெல்லி:

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்,  கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அமித்ஷா, ஜெ.பி.நட்டா மற்றும் பா.ஜ., தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அருண் ஜெட்லியின் உடல் நாளை காலை 10 மணியளவில், மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக பாஜக தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்படும். பிற்பகலுக்குப் பிறகு, உடல் தகனம் டெல்லி நிகம்போத் காட்டில் நடைபெறும் என பா.ஜ., செயல் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அஞ்சலி செலுத்தினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்