நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி உரை!

நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி உரை!

புதுடெல்லி:

நாட்டின் 17வது மக்களவையின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார்.

முன்னதாக புதியதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர் ஆற்றிய உரையில், மக்களவையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளது பெருமிதம் அளிக்கிறது. தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பதுதான் அரசின் நோக்கம். நடந்து முடிந்த தேர்தலில் 61 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர் என குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

மேலும், அனைவருக்கும் வளர்ச்சி என்பதோடு, அனைவரது நம்பிக்கையையும் பெறவேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும், விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. நாட்டின் நகர்புற பகுதிகள் மட்டுமின்றி ஊரகப்பகுதிகளும் சேர்ந்ததே வளர்ச்சியடைய வேண்டும். கிராம பகுதிகளின் வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும். வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்