டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடா?

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடா?

சென்னை:

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் ராமேஸ்வரத்தில் எழுதிய 100 பேரில் 40 பேர் தேர்ச்சிபெற்றுள்ளதை முறைகேடா அல்லது இயல்பா என டாக்டர் ராமதாஸ் விசாரணைக்கு கோரிக்கை வைத்துள்ளளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் திவில், டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4 தேர்வுகளில் இராமேஸ்வரம், கீழக்கரையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் 40 இடங்களை பிடித்து இருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

கடந்த 2017-18 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி 2ஏ தேர்வுகளில் முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் 30 பேர் இந்த மையங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஐயத்தை அதிகப் படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளிக்க வேண்டும்.

அதிகம் பேர் முதலிடம் பெற்ற தேர்வு மையங்களில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தேடி வந்து தேர்வு எழுதியிருப்பது இயல்பாக நடந்த ஒன்றா? திட்டமிட்டு செய்யப்பட்ட ஏற்பாடா? என்பது குறித்து விளக்கம் தேவை. இதில் முறைகேடு நடந்திருந்தால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்