சீனாவில் மாணவர்கள் தவிப்பு; ராமதாஸ் வேண்டுகோள்

  • In Chennai
  • January 25, 2020
  • 175 Views
சீனாவில் மாணவர்கள் தவிப்பு; ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 25 இந்திய மாணவர்களை அவர்களுக்கு உதவிகள் வழங்க டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில், சீனாவில் கொரோனாவைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வூகான் நகரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 25 இந்திய மாணவர்கள் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இரு நாட்களுக்கு மட்டுமே உணவு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

சீனாவின் வூகான் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியுறவுத் துறை அதிகாரிகள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களை த £யகத்துக்கு அழைத்து வருவது நல்லதா, அங்கேயே பாதுகாப்பை உறுதிப்ப டுத்துவது நல்லதா? என்பதை அவர்களின் விருப்பத்தை அறிந்து இந்திய அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்