டிஎன்பிஎஸ்சி-க்கு ராமதாஸ் பாராட்டு

டிஎன்பிஎஸ்சி-க்கு ராமதாஸ் பாராட்டு

சென்னை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி) பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள தொகுதி-2 முதனிலை தேர்வில் பொதுத்தமிழ் தாள் நீக்கப்பட்டாலும் அதில் கேட்கப்படும் வினாக்கள் முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் என தமிழ் சார்ந்த பகுதிகள் இத்தேர்வுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்கள், தமிழைப் படிக்காதவர்கள் இனி வெற்றி பெற முடியாது என்ற நிலையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக மாணவர்களுக்கு சாதகமானதாக அமையும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பாராட்டுகள். தமிழ் வாழ்க என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்