திருமாவும் இல்லையாம், வைகோவும் இல்லையாம் குழப்பி எடுக்கும் ராமதாஸ்

திருமாவும் இல்லையாம், வைகோவும் இல்லையாம் குழப்பி எடுக்கும் ராமதாஸ்

ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்எனக் கூறி ராமதாஸ் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், ”திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்”என நேற்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், வைகோ, நல்லகண்ணு, சுப்ரமண்யசுவாமி என பலரது பெயர்களையும் குறிப்பிட்டு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.மீண்டும் நேற்றைய பதிவை டேக் செய்துள்ள ராமதாஸ், இண்ரு வெளியிட்டுள்ள பதிவில், ”இந்த பதிவுக்கான பின்னூட்டத்தில் பலரும் பல தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஆனால், கலைஞர் குறிப்பிட்டது அதிமுக, திமுக, திக, மதிமுக, தேமுதிக, பாஜ௧, காங்கிரஸ், பொதுவுடைமை இயக்கங்கள், விசிக, ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பெயர்களையோ, மறைந்த தலைவர்களின் பெயர்களையோ அல்ல!”எனத் தெரிவித்துள்ளார். இதனால் வெறுத்துப்போன நெட்டிசன்கள் அந்தத் தலைவரின் பெயரை சொல்ல தயக்கம் ஏன்..? பயமா..? இருக்கிற நெருக்கடிகளில் ராமதாஸ் இப்படி ஒரு புதிர் போட்டு குழப்புவது எதற்காக என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்