காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி:

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370ஐ ரத்து செய்யப்பட்ட நிலையில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கையும் இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்