கரோனா பேரிடருக்கு இடையே தேர்வுகளை நடத்துவது சரியல்ல: ராகுல்

கரோனா பேரிடருக்கு இடையே தேர்வுகளை நடத்துவது சரியல்ல: ராகுல்

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்வுகளை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

கரோனா பேரிடரக்கு இடையே தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் துவக்கியிருக்கும் மாணவர்களுக்காக பேசுங்கள் என்ற விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல் எழுப்பியுள்ளார்.

அதில், கரோனா பேரிடருக்கு மத்தியில் தேர்வுகளை நடத்துவது முற்றிலும் தவறானது. பல்கலைக்கழக மானியக் குழு, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும், மாணவர்களின் முந்தைய கல்வி நிலையை அடிப்படையாக வைத்து தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தியுள்ளார்.முன்னதாக, நாடுமுழுவதும் பல்கலைக்கழக இறுதித் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அறிவுறுத்தியிருந்தது.

இதுதொடர்பாக திங்களன்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் எழுதியிருந்த கடிதத்தில், ‘பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) வழிக்காட்டுதல்படி இறுதித் தேர்வுகளை பல்கலைக் கழகங்கள் கட்டாயம் நடத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்