ரஜினி குறித்து கனிமொழி

ரஜினி குறித்து கனிமொழி

சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் அதன்பின்னர் அவரின் கருத்துக்களுக்கு விமர்சனம் தெரிவிக்கலாம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அமித் ஷாவும் பிரதமர் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள்.

காஷ்மீரை இரண்டாக பிரித்தது சிறப்பான நடவடிக்கை. அவரது பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது அமித் ஷா யார் என்று மக்களுக்கு தெரிந்து இருக்கும், என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் இது பற்றி திமுக எம்பி கனிமொழியிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கனிமொழி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கவே இல்லை. அவருடைய கருத்துக்கு தற்போது எப்படி பதில் சொல்ல முடியும். முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும்.

இப்போது அவருக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி தொடங்கிய பின் அவர் கூறும் விஷயங்களுக்கு கருத்து கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்