‘‘தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை’’ ரஜினிகாந்த் பேட்டி!

‘‘தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை’’ ரஜினிகாந்த் பேட்டி!

சென்னை:

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.

நேரு, இந்திரா, வாஜ்பாய் வரிசையில் மோடி தலைவராக உருவெடுத்துள்ளார். கோதாவரி – காவிரி இணைப்பு குறித்து நிதின் கட்கரி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், ராகுல்காந்தி பதவி விலக தேவையில்லை, எதிர்க்கட்சியின் செயல்பாடு முக்கியமானது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்றும் நாளை மறுநாள் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்