ரஜினியுடன் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் சந்திப்பு..!

ரஜினியுடன் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் சந்திப்பு..!

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த்துடன், அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் இன்று சந்தித்து பேசினார்.

திருச்சி ஓலையூர் அருகே உள்ள குமாரமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ரஜினியின் தாய் ராம்பாய் தந்தை ராமோஜிராவின் மணிமண்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை கடந்த மார்ச் 25 ம் தேதி திறக்கப்பட்டது. இதன் 48வது நாள் மண்டல பூஜை கடந்த 11ம் தேதி நடந்தது.

இதில் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ் கலந்துகொண்டு கூறுகையில், ரஜினி படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். படப்பிடிப்பு முடிந்த பிறகு நிச்சயம் இங்கு வருவார். மேலும், தனது அரசயில் பிரவேசம் குறித்து மே 23ம் தேதிக்கு பிறகு நல்ல முடிவு அறிவிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ரஜினியுடன் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சென்னை உள்ள போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்