தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் ரஜினி கட்சி அறிவிப்பு?

தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் ரஜினி கட்சி அறிவிப்பு?

ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு, அடுத்தாண்டு பிப்ரவரியில் வெளியாகலாம் என, தெரிகிறது.அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளருக்கு போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இன்று, அதற்கான பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என, நம்பப்படும் ரஜினி, தன் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் முதல்வர் வேட்பாளரை, அடுத்தாண்டு பிப்ரவரியில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு, மூன்று மாதத்திற்கு முன்னதாக பெயரை அறிவிக்க, ரஜினி திட்டமிட்டுள்ளார். அதன்பின், ஒரே கட்டத்தில் முழுமூச்சாக தேர்தல் பணியில் ஈடுபடவும், அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்