சாமிக்கு வந்த எல்லா பொருளிலும் பங்கு, ரஜினிமுருகன் பட பாணியில் சிக்கிய நபர்

சாமிக்கு வந்த எல்லா பொருளிலும் பங்கு, ரஜினிமுருகன் பட பாணியில் சிக்கிய நபர்

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இங்கு பங்குனி ஆடி, தை மாதங்களில் நடைபெறும் விழாக்களில் அதிகளவு மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வதும் உண்டு.

இங்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்ட பொருட்களையும், விலையுயர்ந்த பட்டுப் புடவைகளையும் அம்மனுக்கு காணிக்கை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கை முறைப்படி கொண்டு வரப்படுவது இல்லை என்று புகார் எழுந்த நிலையில், கோவிலில் உள்ள சிசிடிவி கேமராக்களை அறநிலையத்துறை உதவி ஆய்வாளர் ஆய்வு செய்துள்ளார்.

இதில் மூன்று பூசாரிகள் காணிக்கைப் பொருட்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளும் காட்சிகள் பதிவாகி உள்ளது.இந்த காட்சிகளின் அடிப்படையில் ராமர், கதிரேசன், ஹரிராம் ஆகிய 3 பேரையும் பூஜை மற்றும் விழாக்களில் பங்கு பெற தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இவர்கள் இதுபோன்ற மோசடியில் எத்தனை வருடங்களாக ஈடுபட்டு வந்தனர்? எவ்வளவு பொருள் திருடப்பட்டுள்ளது? என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்