மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்புராஜ்?

மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்புராஜ்?

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் முதன் முறையாக இணைந்துள்ள ஏ.ஆர்.முருகதாசின் ‘தர்பார்’ படம் தற்போது மும்பையில் வேகமாக நடந்து வருகிறது.

ஏற்கனவே ரஜினியுடன் சந்திரமுகி உள்ளிட்ட 3 படங்களில் நடித்துள்ள நயன்தாரா, தற்போது நான்காவது முறையாக கதாநாயகியாக இணைந்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவரும் முதல் படம் என்பதால், இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைக்கும் என்று திரைத்துறையில் பேசப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடைய மருமகன் தனுஷின், வொண்டர் நிறுவனத்துக்கு ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், ஏற்கனவே ‘பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ரஜினி நடித்து வரும் ‘தர்பார்’ படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தனுஷ் தயாரித்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டு துவக்கத்திலோ படப்பிடிப்பு துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்