வல்லபாய் சிலையைவிட உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை!

வல்லபாய் சிலையைவிட உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை!

ஜெய்ப்பூர்:

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட மிக உயரமான சிவன் சிலை ராஜஸ்தானில் உருவாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம், நதட்வாரா பகுதியில் 351 அடி உயரத்தில் 2,500 டன் ஸ்டீல்களால் சிவன் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சிவன் உருவத்தின் தோள் பகுதி வரையிலான உயரம் மட்டும் 260 அடி ஆகும்.

கடந்த 2013ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த சிவன் சிலை பகுதியில், 20 அடி உயரத்தில் 3 பார்வை மாடங்கள், லிஃப்ட் என பல கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலை வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

உலகளவில் குஜராத்தில் அமைந்துள்ள வல்லபாய் பட்டேல் சிலை, சீனாவின் புத்தர் சிலை, மியான்மரின் லேகுன் செக்யா சிலை ஆகியவற்றை தொடர்ந்து 4வது பெரிய சிலையாக ராஜஸ்தானின் சிவன் சிலை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்