நீலகிரி தொகுதியில் ஆ.ராசா வெற்றி உறுதி!

நீலகிரி தொகுதியில் ஆ.ராசா வெற்றி உறுதி!

சென்னை:

நீலகிரி மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசாவின் வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

20வது சுற்றில், ஆ.ராசா, 5 லட்சத்து 14 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் 3 லட்சத்து 19 ஆயிரத்து 622 வாக்குகள் பெற்றிருந்தார்.

கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்ற ஆ.ராசா வெற்றி உறுதிசெய்யப்பட்டது.

ஆ.ராசா – திமுக – 5,14,057
எம்.தியாகராஜன் – அதிமுக- 3,19,622
ராமசாமி – அமமுக – 39,672
ராஜேந்திரன் – மநீம – 38,286

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்