அமிதாப் பச்சன் வீட்டில் வெள்ளம்

  • In Cinema
  • September 4, 2019
  • 204 Views
அமிதாப் பச்சன் வீட்டில் வெள்ளம்

மும்பை:

மும்பையில் பெய்து வரும் கனமழையால் நகரின் முக்கிய இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் போக்குவரத்தும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் வீடும் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கிறது. எப்போது மழை வந்தாலும் இவரின் பங்களா மட்டும் மழைநீரால் சூழப்படுகிறது. ஏனெனில் கடலின் அருகிலே இந்த வீடு அமைந்திருப்பதால் ஆண்டுதோறும் இந்த பாதிப்பு ஏற்படுத்துகிறது என தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்