வெப்ப சலனத்தால் தமிழகத்தில் மழை..!

வெப்ப சலனத்தால் தமிழகத்தில் மழை..!

சென்னை:

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி உள்ளிட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் நாகை, கடலூர், விழுப்புரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்சென்னையை பொறுத்தவரை வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்