தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:

தென் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறை காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்