4 லட்சம் கூடுதல் இருக்கை.. ரயில்வேயில் புதிய மாற்றம்.!

4 லட்சம் கூடுதல் இருக்கை.. ரயில்வேயில் புதிய மாற்றம்.!

புதுடெல்லி:

அக்டோபர் மாதம் முதல் புதிதாக 4 லட்சம் இடங்களை அதிகரிக்க உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கூட்டம் நெரிசல் கணிசமாக குறையவும் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள பயணிகளுக்கு அமருவதற்கு இடம் கிடைக்கவும் வழி கிடைக்கும்.

புதிய தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் பழைய ஸ்லீப்பர் பெர்த்துகளுக்கு மாற்று ஏற்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பாலான ரயில்களில் டீசல் ஜெனரேட்டர்கள் உள்ளன. இதன் மூலம் ரயில் பெட்டிகளுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இதற்கு மாற்றாக புதிய தொழில்நுட்பம் மூலம் உயர்மின் அழுத்த கம்பிகள் வழியாக ரயிலுக்கு மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

எஞ்சின்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் இனி ரயில்பெட்டிகளுக்கும் இணைக்கப்படும். இதன் மூலம் 5 ஆயிரம் ரயில்பெட்டிகள் மாற்றியமைக்கப்பட உள்ளன.

இந்த வகையில் ரயிலுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பயணிகளுக்கு கூடுதலான இடமும் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்