இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராகுல் பாராட்டு

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராகுல் பாராட்டு

டெல்லி:
இன்று அதிகாலை 1.30 மணிக்கு சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது.

2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் ஆறுதல் தெரிவித்து பேசினார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நிலவை ஆராயும் சந்திரயான் 2 விண்கலத்திற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பமுடியாத உழைப்பை கொடுத்தனர். அதற்காக அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு இந்தியருக்கும் உங்கள் ஆர்வம், அர்ப்பணிப்பு உத்வேகமான ஒன்றாகும். உங்கள் பணி வீணாவதே இல்லை.

இது இன்னும் பல பாதைகளை தகர்த்து எறியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்