காஷ்மீருக்கு வரத்தயார்

காஷ்மீருக்கு வரத்தயார்

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீருக்கு எந்தவித நிபந்தனைகள் இன்றி வரத்தாயாராக உள்ளதாகவும், எப்போது வரவேண்டும் என்றும் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 10ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்குப்பின், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், காஷ்மீரில் பதற்றம் நிலவுவதாக கூறியிருந்தார்.

இதற்கு கருத்து தெரிவித்த காஷ்மீர் ஆளுநர், காஷ்மீருக்கு வந்து, அமைதியாக இருக்கும் நிலைமையை பார்வையிடுமாறும், அதற்கு விமானம் அனுப்புவதாகவும் கூறியிருந்தார்.

இதுசம்பந்தமாக பதிலளித்த ராகுல் காந்தி, தமது கருத்திற்கு, காஷ்மீர் ஆளுநரின் பலவீனமான பதிலை கண்டதாக சாடியுள்ளார். மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு வருமாறு கூறிய தங்கள் அழைப்பை, எந்த நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டு, அங்கு வந்து மக்களை சந்திக்க தயாராக இருப்பதாகவும், ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்