ரபேல் முறைகேடு வழக்கு தள்ளுபடி

ரபேல் முறைகேடு வழக்கு தள்ளுபடி

புதுடெல்லி:

ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க ரூ.58 ஆயிரம் கோடி ஒப்பந்தம் போடப்பட்டது.

இதனையடுத்து, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுக்களை 2018 டிசம்பர் 14ம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத்தொடர்ந்து, ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இதில் ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்