அனைத்து கடைகளுக்கும் ‘கியூஆர்’ குறியீடு கட்டாயம்?

அனைத்து கடைகளுக்கும் ‘கியூஆர்’ குறியீடு கட்டாயம்?

புதுடெல்லி:

நாடுமுழுவதும் உள்ள அனைத்து கடைகளுக்கும் ‘யூபிஐ’ பணப்பரிவர்த்தனை சேவையின் கீழ் ‘கியூஆர்’ குறியீட்டை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், யூபிஐ, பிம், கூகுள் பே, போன் பே ஆகிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் வணிக ரீதியாக கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் அனைத்து கடைகளிலும் கியூஆர் குறியீட்டை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இதற்கான வரவறிக்கைக்கு ஜிஎஸ்டி கவுன்சிலும் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய கொடுப்பனுவுகள் கார்ப்ரேஷன் அதற்கான பணிகள் ஈடுபட்டு வருகிறது.

இதன் மூலம் வணிகர், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் ஜிஎஸ்டி நன்மைகள் சென்றடையும். அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சேவை கட்டாயமாக்கும் போது, கூடுதல் சலுகைகள், தள்ளுபடிகள், கேஷ்பேக் ஆபர்களை வழங்குவது குறித்து மத்திய அரசு விவாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட் போன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. மேலும், சிங்கப்பூர், மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலும் மொபைல் பணப்பரிவர்த்தனை மி வேகமான வளர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்