உடலெல்லாம் திடீர் வியர்வை, 16 வயதில் மாரடைப்பு

உடலெல்லாம் திடீர் வியர்வை, 16 வயதில் மாரடைப்பு

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் ஈரோட்டில் உள்ள முட்டை நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மகனின் பெயர் சதீஷ்குமார்.

இவர் ஈரோட்டில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல் வருடம் பயின்று வருகிறார். இந்த நிலையில், மாணவர் சதீஷ்குமார் எந்த நேரமும் அவர் அலைபேசியில் பப்ஜி கேம் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதனை பெற்றோர்கள் பலமுறை கண்டித்தும் அவர் கேட்காது, தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். மேலும், அலைபேசியில் உள்ள கேமில் தோற்று விடக் கூடாது என்ற வகையில் அனைத்து விளையாட்டுகளிலும் தொடர்ந்து முதல் நபராக வெற்றி பெற்று வந்துள்ளார்.தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக முழுவதுமாக அலைபேசியில் மூழ்கியிருந்த மாணவன், செவ்வாய்க்கிழமை மதியம் வழக்கம் போல பப்ஜி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். ஒரு சமயத்தில் உடலில் திடீரென வியர்த்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அங்குள்ள மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் சோதனை செய்வதில் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், மன அழுத்தம் மற்றும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்