குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம்.. பிரியங்கா சோப்ரா ஓப்பன் டாக்..!

  • In Cinema
  • May 13, 2019
  • 220 Views
குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம்.. பிரியங்கா சோப்ரா ஓப்பன் டாக்..!

விஜய் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்க்கிறார். கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் விவாகரத்து செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. இதனை மறுத்த குடும்பத்தினர் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

இதனை உறுதிப்படுத்துவதுபோல் நிக்ஜோனாசுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை டுவிட்டரில் பிரியங்கா சோப்ரா வெளியிட்டார்.

திருமணம் ஆகி இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையே என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கு பிரியங்கா சோப்ரா தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால் அது கடவுள் நினைக்கும்போது கண்டிப்பாக நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்