ரோஜா உற்பத்தி பாதிப்பு; விலை உயர வாய்ப்பு

ரோஜா உற்பத்தி பாதிப்பு; விலை உயர வாய்ப்பு

ஒசூர்:

ஓசூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ரோஜா உற்ப்பதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளில் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதிகளில் 10 ஆயிரம் ஹெக்டர்களில் பசுமைக்குடில்கள் அமைத்தும், திறந்தவெளியாகவும் ரோஜா, ஜர்புரா, பிங்க், கார்னேசன் உள்ளிட்ட மலர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

ஓசூர் பகுதியில் விளையும் மலர்களுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளநிலையில், ஓசூருக்கு ரோஜாக்களின் நகரம் என்கிற அழகிய பெயருமுண்டு.

ஓசூர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக பெய்த மழையின் காரணமாக விவசாயம் செய்யப்பட்டு வந்த ரோஜா செடிகளில் (டவுணி,டிரிப்ஸ்,மைல்ஸ்) ஆகிய நோய் தாக்கப்பட்டிருப்பதால் இலைகள் கருகுவதும், மலர்களில் சிகப்பு வண்ணம்போல் நோய் போன்று காட்சியளிக்கிறது.

அதிகப்படியான பனி அல்லது மழை பெய்தாலே இதுப்போன்ற நோய் ரோஜா செடிகளை தாக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளை குறிவைத்து ரோஜா விவசாயம் செய்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர், ரோஜா பூக்கள் உற்ப்பதி பாதிக்கப்பட்டிருப்பதால் பண்டிகை நாட்களில் அதிகமான விலைக்கு விற்க்கப்படும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது, கடந்தாண்டு ஒரு ரோஜா மலர் 30 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட நிலையில் இந்தாண்டு மேலும் பனி அதிகரித்து உற்ப்பதி குறைவதால் ஒரு ரோஜா 50 ரூபாயை அதிகரித்து விற்க்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்