வீடியோ கான்பிரன்ஸ் கூட்டத்தில் ஆபாச வீடியோ..! 33 மாவட்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சி..!!

வீடியோ கான்பிரன்ஸ் கூட்டத்தில் ஆபாச வீடியோ..! 33 மாவட்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சி..!!

ஜெய்ப்பூர்:

ஜெய்ப்பூர் தலைமை செயலகத்தில் நடந்த அரசு அதிகாரிகள் கூட்டத்தில் ஆபாச வீடியோ ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் உள்ள தலைமை செயலகத்தில், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை சார்பில் நேற்று உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது.

வீடியோ கான்பிரன்சில் ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் 33 மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேசிய தகவல் மைய அறையில் துறையின் செயலாளர் முக்தா சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், வீடியோ கான்பிரன்சில் அரசு நலத்திட்டங்களை விளக்கிக்கொண்டிருந்தபோது, திடீரென ஆபாச படம் ஓடியுள்ளது. உடனே, கூட்டம் நிறுத்தப்பட்டு தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முக்தா சிங் கூறியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்