பாலவாடி ஊராட்சியில் பொங்கல் பரிசு

பாலவாடி ஊராட்சியில் பொங்கல் பரிசு

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 99 ஆயிரத்து 573 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீளக்கரும்பு துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் கடந்த 5ம் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாலவாடி ஊராட்சியில் 1315 குடும்ப அட்டைகள் உள்ளன.

பாலவாடி நியாயவிலைக்கடையில் அதிமுக ஒன்றிய துணை செயலாளர் வேடி மற்றும் நியாயவிலைக்கடை ஊழியர் பாலாஜி ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்