ஜன., 9ல் ரூ.1000 பொங்கல் பரிசு

ஜன., 9ல் ரூ.1000 பொங்கல் பரிசு

சென்னை:

உள்ளாட்சி தேர்தலையொட்டி நிறுத்திவைக்கப்பட்ட ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசு வரும் 9ம் தேதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

ஆனால், உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை தடை செய்ய வேண்டும் எனவும், ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசை அதிமுகவினரே வழங்கவுள்ளதாகவும், இதனால் அதிமுக வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என சுயேச்சை வேட்பாளர் அலமேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தலையொட்டி, 27 மாவட்டங்களில் ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்க அரசுக்கு தடை விதித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையயம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை வழங்கப்படும் எனவும், விடுபட்டவர்களுக்கு 13ம் தேதி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்