போலீசார் ரோந்து; பொதுமக்கள் கோரிக்கை

போலீசார் ரோந்து; பொதுமக்கள் கோரிக்கை

ஒசூர்:

ஒசூர் அருகே வாகன திருட்டு அதிகரிப்பால் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேப்பள்ளியில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சம்பவம் சிசிடிவி பாதுகாப்பு கேமராவில் பதிவாகி உள்ள சம்பவத்தால் இரவு நேரங்களில் போலிசார் ரோந்து பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பென்னாகரத்தை சேர்ந்தவர் ராஜதுரை இவர் ஓசூர் அருகே பேகேப்பள்ளியில் வீடு வாடகைக்கு எடுத்து தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக பணிபுரிந்து வருக்கிறார். இவர் இருசக்கர வாகனத்தை இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் இருவர் நள்ளிரவில் திருடி செல்கின்றனர். இந்த சம்பவம் அங்கு இருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது.

இவர் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது மர்மநபர் எந்த ஒரு பதற்றம் இன்றி நிதானமாக சென்று இருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று வாகனத்தை ஸ்டார்ட் செய்து ஒட்டி செல்வதும் இருசக்கர வாகனம் திருடி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து ராஜதுரை ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார், ஓசூர் பகுதியில் இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து பணியை மேற்கொள்ள மீண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்