டிக்கெட் எடுக்காத போலீஸ்.. நடத்துனர் உயிரிழப்பு

டிக்கெட் எடுக்காத போலீஸ்.. நடத்துனர் உயிரிழப்பு

கடலூர்:
திருச்சியிலிருந்து கடலூர் செல்லும் அரசுப் பேருந்தில் திட்டக்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் பழனிவேல் என்பவர் சீருடையில்லாமல் பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது நடத்துனர், பழனிவேலிடம் டிக்கெட் வாங்குமாறு கூறியுள்ளார்.

அதற்கு நான் போலீஸ் என்று கூறிவிட்டு தன்னுடைய அடையாள அட்டையை காண்பிக்க மறுத்துள்ளார்.

இதனால் நடத்துனருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தொலைவு வரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இறுதியில் பயணிகளும் நடத்துனருக்கு ஆதரவாக பேசியுள்ளனர். வாக்குவாதம் கடுமையாக முற்றிய பின்னர் நடத்துனர் கோபிநாத் மயங்கி விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த சகபயணிகள் நடத்துனரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

டாக்டர்கள் பரிசோதித்தபோது கோபிநாத் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் பயணிகளிடம் இருந்த போலீஸ் பழனிவேலை மீட்டு காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்