யோகிபாபு மீது புகார்

  • In Cinema
  • February 4, 2020
  • 207 Views
யோகிபாபு மீது புகார்

சென்னை:

கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் நடித்துள்ளதாக நடிகர் யோகி பாபு மீது இந்து மக்கள் முன்னணியினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

தமிழ் திரைத்துறையில் முன்னணி காமெடி நடிகரா வலம் வருபவர் யோகி பாபு. கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் கதாநாயகனாக நடித்த ‘தர்ம பிரபு’ படமும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், யோகி பாபு நடிக்கும் ‘காக்டெய்ல்’ படத்தின் பர்ஸட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் முருகனாக யோகி பாபு தோன்றியுள்ளார். அவருக்கு பின்னால் காக்டெய்ல் பறவை ஒன்றும் இருந்தது.

இந்த போஸ்டரில் முருகன் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதுள்ளதாக, இயக்குநர் மற்றும் நடிகர் யோகி பாபு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் முன்னணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்