தொடர் கொலை; தீவிர வாகன சோதனை

தொடர் கொலை;  தீவிர வாகன சோதனை

ஓசூர்:

தமிழக மாநில எல்லைகளில் தொடர்ந்து கொலை செய்யட்ட அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்படுவதால்,காவல்துறை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மாநில எல்லையில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் என்பது தமிழக – கர்நாடக மாநில எல்லையாக இருந்து வருகிறது. சமீப காலமாக கர்நாடக மாநிலத்தில் நடக்கும் கொலைகள், காவல்துறையினரை குழப்பும் வகையில் தமிழக மாநில எல்லை பகுதியில் வீசி செல்வதும், அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை சிதைத்து, பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவதுமாக நாளுக்குநாள் நடந்தேறி வருகிறது.

கடந்த மாதம் காரில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கூலிப்படை ஓசூரை அடுத்த லிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஸ் என்பவரை பாகலூர் காவல் நிலையத்திற்கு அருகாமையிலேயே சரமாரியாக வெட்டி வீசி தப்பி சென்றது, இதுவரை அந்த கொலை வழக்கில் யாரும் பிடிப்படாத நிலையில்,இன்று காலை கக்கனூர் என்னுமிடத்தில் முகத்தில் சரமாரியாக வெட்டப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் கண்டெடுத்துள்ள சம்பவம் ஓசூர் சுற்றுப்பகுதியினரை அச்சமடைய வைத்துள்ளது.

தமிழக மாநில எல்லை பகுதிகளில் அரங்கேறும் இந்த சம்பவங்களை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவின்பேரில்,

கர்நாடகவிலிருந்து தமிழகத்திற்கு நுழையக்கூடிய அத்திப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, பூனப்பள்ளி, கக்கனூர்,சம்பங்கிரி உள்ளிட்ட இடங்களில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகனசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை ஓசூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து எந்தவித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வரும் நிலையில், மேலும் இதுப்போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கையே இந்த வாகன சோதனை என போலீசார் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

தமிழக மாநில எல்லை பகுதிகளில் அரங்கேறும் இந்த சம்பவங்களை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவின்பேரில், கர்நாடகவிலிருந்து தமிழகத்திற்கு நுழையக்கூடிய அத்திப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, பூனப்பள்ளி, கக்கனூர்,சம்பங்கிரி உள்ளிட்ட இடங்களில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகனசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை ஓசூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து எந்தவித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வரும் நிலையில், மேலும் இதுப்போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கையே இந்த வாகன சோதனை என போலீசார் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்