வாரண்ட் கேட்ட நடத்துநரை சராமாரியாக தாக்கிய போலீஸ்

வாரண்ட் கேட்ட நடத்துநரை சராமாரியாக தாக்கிய போலீஸ்

நாகர்கோவில்:
நாகர்கோவில் ராணித்தோட்டம் டிப்போவிலிருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்து குமுளியிலிருந்து நாகர்கோவிலுக்கு நேற்று மாலை சென்றுகொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் ஏறிய நெல்லை ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் மகேஷ், தமிழரசன் ஆகியோர் டிக்கெட் எடுக்காமல் பேருந்தில் அமர்ந்துள்ளனர்.

டிக்கெட் எடுக்காமல் இருந்தால் நீங்கள் பேருந்தில் பயணிப்பதற்கான வாரன்டை காட்டுங்கள் என்று நடத்துநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த காவலர்கள் பேருந்து நடத்துநரை தகாத வார்த்தையில் திட்டியதுடன், அவரைத் அடித்துள்ளனர்.

இதில் நடத்துனருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பேருந்தை மூன்றடைப்பு காவல்நிலையத்துக்கு விடும்படி பயணிகளும் நடத்துனரும் கூறியுள்ளனர்.

காவல் நிலையத்தில் நடத்துநர் ரமேஷ் புகார் அளித்தார்.

இதற்கிடையில், பேருந்தில் காவலர்கள் நடத்துநரை தாக்கும் காட்சியை பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை பார்த்த காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டனர்.

மூன்றடைப்பு போலீஸார் ஆயுதப்படையைச் சேர்ந்த மகேஷ், தமிழரசன் ஆகியோரை கைது செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்