விவசாயிகளுக்கு கூடுதல் பணம்.. எடியூரப்பா அதிரடி!

விவசாயிகளுக்கு கூடுதல் பணம்.. எடியூரப்பா அதிரடி!

பெங்களூரு:

கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின், அந்த மாநில விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் கூடுதல் பணம் வழங்கப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

முதல்வராக பதவியேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, முதல்வராக வாய்ப்பளித்த கர்நாடக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது முதல்வர் பதவி மாநில மக்களின் மரியாதை எனவும் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பாஜக தொண்டர்கள் ஆகியோரின் ஆசிர்வாதத்தால் தற்போது பதவியேற்றுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எக்காரணத்தைக் கொண்டும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன். இன்னும் 5 மாதத்தில் எனது தலைமையிலான அரசு, மற்றும் முந்தைய அரசின் சாதனைகள் என்ன என்பது குறித்து காட்ட வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது. யாரு தவறு செய்திருந்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்ற எண்ணம் கொண்டவன் நான்.

எனது முதல் பணி விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது கஷ்டங்களை போக்குவது குறித்து தான். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 தவணைகளாக ரூ.2000 விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் அன்றைய தினமே நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்