குடியரசுத்தலைவராக வருவதற்கு டிப்ஸ் கேட்ட மாணவன்

குடியரசுத்தலைவராக வருவதற்கு டிப்ஸ் கேட்ட மாணவன்

பெங்களூரு:
நான் குடியரசுத்தலைவராக வருவதற்கு எனக்கு டிப்ஸ் கொடுங்கள் என்று பிரதமர் மோடியிடம் ஒரு மாணவன் கேள்வி எழுப்பிய சம்பவம் இஸ்ரோ மையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

சந்திராயன் 2 திட்டத்தின் நிறைவுப்பணியான, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்குவதை பார்ப்பதற்காக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் மோடி வந்திருந்தார்.

அப்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் வந்திருந்தனர். மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அதில் ஒரு மாணவன், பிரதமர் மோடியிடம் நான் குடியரசுத்தலைவராக வருவதற்கு டிப்ஸ் கொடுங்கள் என்று கேட்டார்.

இதற்கு நீ ஏன் பிரதமராகக்கூடாது என்று பிரதமர் பதிலளித்தார்.

மேலும், சிறிய இலக்குகளை அடைய முனையுங்கள். நீங்கள் தவறவிட்டதை மறந்துவிடுங்கள், ஏமாற்றத்தை ஒரு போதும் அனுமதிக்க வேண்டாம். என்று கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்