விஞ்ஞானிகளுடன் இந்திய மக்கள் உள்ளனர்

விஞ்ஞானிகளுடன் இந்திய மக்கள் உள்ளனர்

பெங்களூரு:
மொத்த இந்தியாவும் உங்களுடன் இருக்கிறது என்று பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார்.

சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் என்ற லேண்டர் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் தரையிறங்குவதாக இருந்தது.

ஆனால், நிலவின் அருகே 2.51 கி.மீ, தொலைவுக்கு அது சென்றபோது திடீரென்று தரை கட்டுப்பாட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனை பிரதமர் மோடி இஸ்ரோ மையத்தில் இருந்து சந்திராயன் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது விஞ்ஞானிகள் உடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதும். நீங்கள் கவலைப்பட வேண்டார் என்று பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி சந்திராயன் 2 பற்றி உரையாற்றினார்.

இஸ்ரோ மையத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சிவன் வறவேற்றார்.

இதன் பின்னர் பிரதமர் மோடி விஞ்ஞானிகளிடம் உரையாற்றினார்.

இன்று சில தடைகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது நமது உறுதியை பலவீனப்படுத்தாது.

அதற்கு பதிலாக, நம்மை பலப்படுத்துகிறது. நான் உங்களுடன் ஒவ்வொரு கணமும் இருக்கிறேன்.
இன்று நீங்கள் தடைகளை எதிர்கொண்டிருந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை.

இந்த திட்டத்தால் நாங்கள் பெருமைப்படுகிறோம். இன்று நிலவை தொடுவதற்கான நம் தீர்மானம் இன்னும் வலுவடைந்துள்ளது.

மீண்டும் நாம் எழுந்து வருமோம்
இரவு முழுவதும் நீங்கள் இந்திய தாயை பெருமைப்படுத்த செலவிட்டு வருகிறீர்கள்.

உங்களுடைய வருத்தம் எனக்கு புரிகிறது. கவலைப்பட வேண்டாம் ஒட்டு மொத்த இந்தியாவும் உங்களுடன் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்