ஓட்டு போடாதவர்களின் ஆதரவையும் பெறவேண்டும்.. மோடி

ஓட்டு போடாதவர்களின் ஆதரவையும் பெறவேண்டும்.. மோடி

டெல்லி:

டெல்லியில் பாஜக எம்.பி.க்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 2-வது நாளான நேற்று நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:

அனைவரின் நலனுக்காகவும் நீங்கள் செயலாற்ற வேண்டும். பாஜகவுக்குகு ஓட்டு போடாதவர்கள் மீது எதிர்மறை எண்ணம் ஏதாவது இருந்தால் அதை விட்டுவிடுங்கள்.

உங்களது வேலைகள், நடத்தை ஆகியவற்றை பார்த்து அவர்களும் உங்களுக்கு நெருக்கமாக வருவார்கள்.

அவர்கள் ஆதரவையும் பெறுவதன் மூலமே உங்கள் தொகுதிகளை நீங்கள் 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் தக்கவைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்