பிளாஸ்டிக் மாற்றுபொருட்கள் கையேடு வெளியீடு

பிளாஸ்டிக் மாற்றுபொருட்கள் கையேடு வெளியீடு

சென்னை:

தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சிக் கையேட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெறியிட்டார்.

தமிழகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்த நிலையில், கடந்த ஜனவரி முதல் இந்த தடை அமலுக்கு வந்தது.

இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி கையேட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்