தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கிடையாது

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கிடையாது

தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்ததை அடுத்து, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறக்க முடியாது. அவ்வாறு திறந்தால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது.

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறந்தால் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படும். கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, பாதுகாப்புத் தரவோ தற்போதைக்கு போதிய காவலர்களும் இல்லை.அது மட்டுமல்லாமல் மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

தமிழக அரசின் பதிலை ஏற்று, நிபந்தனைகளுடன் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்