குழாய் மூலம் நேபாளத்துக்கு பெட்ரோல்

குழாய் மூலம் நேபாளத்துக்கு பெட்ரோல்

டெல்லி:
இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பூமிக்கு அடியில் இருந்து பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

பீகார் மாநிலம், கெகுசராய் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரியில் இருந்து தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள அமலேககன்ஜ் என்ற பகுதி வரை 69 கி.மீ தொலைவில் பெட்ரோல் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் கடந்த 2014ம் ஆண்டு முதல் விரைவுபடுத்தப்பட்ட நிலையில் தற்போது பெட்ரோல் அனுப்பும் சோதனை ஓட்டம் கடந்த ஜுலை மாதம் முடிந்தது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நேபாளத்தில் காணொலி மூலம் அந்நாட்டு பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தங்கள் பகுதிக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தால் இரு நாடுகளின் உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்